Wednesday, November 01, 2006

நியோ பார்ப்பனீயம்

எனது க்ரீமி லேயர் பதிவிற்கு பின்னூட்டமிட நினைத்த கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி, அது சற்று நீண்டு விட்டதால், மேட்டரை மெயிலில் அனுப்பி, அதை ஒரு பதிவாக இடும்படி வேண்டுகோள் வைத்தார். 'இதில் என்ன இருக்கிறது' என்று அவர் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :) இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!!
*****************

சமீபத்தில் இட ஒதுக்கீடு சம்மந்தமாக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டின் போது அந்தந்த சாதியில் பொருளாதார அடிப்படையில் ஏற்கனவே " வளர்ந்த பிரிவினரை" கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வென்று வரும் போது அந்த சமுதாயங்களில் ஏற்கனவே எந்த சலுகையும் பெறாமல் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களாகப் பார்த்து அவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறது.

உடனே இதை சாதீய தலைவர்களும் மற்றும் சமூக நீதிக் காவலர்களாக தம்மை பாவித்துக் கொண்டவர்களும் எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். இதை ஏதோ அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது போலவும், நீதி மன்றங்களை ஆக்கிரமித்திருக்கும் முன்னேறிய வகுப்பினரின் சதி போலவும் திரித்தும் சித்தரித்தும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.இவர்களது இந்தக் கொந்தளிப்புக்கு என்ன காரணம் ? மேல் ஜாதியினர் ஆண்டாண்டு காலமாக செய்ததை " ஜாதி பிரிவினைகளை உண்டாக்கி சலுகைகளை தாங்களே அனுபவித்ததை " இவர்கள் இன்று தங்களது சாதிகளுக்குள்ளேயே செய்ய முற்பட்டுள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமுதாயத்தில் நிலை உயர ஒவ்வொரு கட்டத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . பொருளாதார ரீதியாக வளர்ந்த பின்னும் சமூக ரீதியாக வளராத வரை இன்னும் சொல்லப் போனால் அனைவருடனும் சம அந்தஸ்து கிடைக்கும் வரை இடஒதுக்கீடு தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் அதே சமயம் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர் என்ற போர்வையில் அதே பிரிவில் உள்ள சில "வளர்ந்த " பிரிவினர் மென் மேலும் சுக போகங்களை தாங்களே பகிர்ந்து கொண்டு அதே சாதியில் இருக்கும் உண்மையிலேயா கீழ்நிலையில் இருப்போருக்கு சலுகை மறைப்பு அல்லது மறுப்பு செய்ய முனைவதும் ஏற்க இயலாதது.

ஜாதீய அடிப்படையில் பிரிவுகள் உண்டாக்கி ஒரு பிரிவினர் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்ததன் பெயர் "பார்ப்பனீயம் " என்றால் இதுவும் ஒருவகையில் " நியோ பார்ப்பனியம் " தான். என் சாதிக்காரன் மலம் அள்ளுகிறான் என கூக்குரலிடும் இவர்கள் யாரும் மலம் அள்ளவும் இல்லை அல்லது இவர்கள் சாதியில் மலம் அள்ளும் எவரையும் முன்னேற்ற முனையவுமில்லை. ஏனெனில் " இவர்கள் வீட்டு மலங்களை அள்ள யாரேனும் வேண்டுமே இந்த நியோ பார்ப்பனர்களுக்கு " இப்படிப் பட்ட" நியோ பார்ப்பனிசத்தையும்" ஒழிப்பதே உண்மையில் பிற்படுத்தப் பட்ட/தாழ்த்தப் பட்ட மக்களுக்கு செய்யும் நன்மை.
**************
நன்றி: கி.அ.அ.அனானி

*** 252 ***

29 மறுமொழிகள்:

நாடோடி said...

//என் சாதிக்காரன் மலம் அள்ளுகிறான் என கூக்குரலிடும் இவர்கள் யாரும் மலம் அள்ளவும் இல்லை அல்லது இவர்கள் சாதியில் மலம் அள்ளும் எவரையும் முன்னேற்ற முனையவுமில்லை. ஏனெனில் " இவர்கள் வீட்டு மலங்களை அள்ள யாரேனும் வேண்டுமே இந்த நியோ பார்ப்பனர்களுக்கு " இப்படிப் பட்ட" நியோ பார்ப்பனிசத்தையும்" ஒழிப்பதே உண்மையில் பிற்படுத்தப் பட்ட/தாழ்த்தப் பட்ட மக்களுக்கு செய்யும் நன்மை.//

இது தான் நிதற்சனமான உண்மை... சரியாக சொல்ல வேண்டுமொன்றால் "காக்டெயில் கம்யுனிசம்"

enRenRum-anbudan.BALA said...

Test !

குழலி / Kuzhali said...

ஏற்கனவே இந்த சுட்டிகள் இதே பதிவரின் பதிவில் கொடுக்கப்ப்டிருந்தாலும் தற்போது மீண்டும் தரவேண்டியதாக இருக்கின்றது, ஏனெனில் சலிக்காமல் பொய்கள் பரப்பப்படும்போது அதை சலிக்காமல் எதிர்க்கும் சக்தி தேவைப்படுகின்றது ஆனாலும் ஒரு சந்தோசம் இப்போதாவது பார்ப்பனீயம், இடஒதுக்கீட்டின் நியாயங்கள் அதை எதிர்ப்பவர்களின் வாயாலே வருவதே இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் தொடர்முயற்சிக்கான வெற்றி...

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?

மற்றவர்களின் க்ரீமிலேயருக்காக குரல் கொடுப்பவர்கள் உயர்சாதி க்ரீமிலேயர்கள் உயர்சாதி ஏழைகளை அமுக்கும் அய்யோக்கியத்தனத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது செலக்டிவ் அம்னீசியா போல

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?

வஜ்ரா said...

கிராமத்து அரட்டை அரசியல் அனானி சொல்வது சரி. தன் சாதிக்காரனை முன்னேறவிடாமல் "புதுப் பார்ப்பானர்கள்" உருவாகிறார்கள். இவர்கள் தங்கள் position ஐ தக்கவைத்துக் கொள்ள OBC. SC, ST கிருமி லேயர் கூடாது என்று கூப்பாடு போடுகின்றனர்...!

ஐயோ, க்ரீமீ லேயரை தவறாக எழுதிவிட்டேன்...இருந்தாலும் அது பொருத்தமாகத்தான் இருக்கிறது...இவர்கள் நவீன யுகத்தின் கிருமி அடுக்குகள்! ருசி கண்ட பூனைகள்.!

குமரன் (Kumaran) said...

பாலா. அடுத்த திவ்ய தேசப் பதிவு எப்போது வரும்? ஆவலுடன் காத்திருக்கிறேன்.

said...

வி.சி. சரியா தான் சொல்லியிருக்காரு. சுட்டிகள் தந்துவிட்டார் காகா.

நாடோடி said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி,

நீங்கள் இட ஓதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இட ஓதுக்கீட்டை ஏற்று கொண்ட வெற்றியை கொண்டாடுவது சந்தோஷமாக இருக்கிறது.

அதே நேரம் பாலா சொன்னதன் நியாயங்கள் உங்களுக்கு புரிகிறதா இல்லையா?

நீங்கள் இட ஓதுக்கீட்டில் பலனடைந்து முன்னேறும் போது உங்கள் இனத்தில் உள்ள அடுத்தவனுக்கு வழி விட்டு ஓதுங்க வேண்டுமா இல்லை இட ஓதுக்கீடு இருக்கும் வரை தலை தலைமுறையாய் அதை சாறு பிழிந்து அனுபவித்து உங்கள் இனத்தில் உள்ள கீழ்நிலை மனிதை புறக்கணிக்க போகிறீர்களா?

எது தவறு என்று கண்டித்து இட ஓதுக்கீடை மாற்றாய் கொணர்ந்தீர்களோ அந்த தவறை இட ஒதுக்கீடின் வாயிலாக நீங்கள் செய்கையில் நியாப்படுத்துகீறிர்களா?

Nakkiran said...

//என் சாதிக்காரன் மலம் அள்ளுகிறான் என கூக்குரலிடும் இவர்கள் யாரும் மலம் அள்ளவும் இல்லை அல்லது இவர்கள் சாதியில் மலம் அள்ளும் எவரையும் முன்னேற்ற முனையவுமில்லை. ஏனெனில் " இவர்கள் வீட்டு மலங்களை அள்ள யாரேனும் வேண்டுமே இந்த நியோ பார்ப்பனர்களுக்கு " இப்படிப் பட்ட" நியோ பார்ப்பனிசத்தையும்" ஒழிப்பதே உண்மையில் பிற்படுத்தப் பட்ட/தாழ்த்தப் பட்ட மக்களுக்கு செய்யும் நன்மை.//

Excellent Points... good...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாலா. அடுத்த திவ்ய தேசப் பதிவு எப்போது வரும்? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Comment by குமரன் (Kumaran) at 9:43 PM, November 01, 2006 //

நானும் கேட்க வேணும் என்று இருந்தேன் பாலா; குமரன் கேட்டே விட்டார்; திவ்ய தேசப் பதிவு, அதற்கு அவ்வளவாக நேரமில்லை என்றால், ஆழ்வார்கள் பதிவு!
எதுனாச்சும் ஒன்றைத் தாருங்கள்; காத்து இருக்கிறோம்!
('பார்ப்பனரல்லாத' ஆழ்வார் ஒருவரை வேண்டுமானால் அடுத்த பதிவில் அறிமுகப்படுத்துங்கள்.
நம்மாழ்வார் part2 எப்போது?)

குமரன் (Kumaran) said...

//('பார்ப்பனரல்லாத' ஆழ்வார் ஒருவரை வேண்டுமானால் அடுத்த பதிவில் அறிமுகப்படுத்துங்கள்.
நம்மாழ்வார் part2 எப்போது?)
//

இரவிசங்கர். இதென்ன பிட்டு போடரீங்க? 12 ஆழ்வார்கள்ல 3 பேர் தான் பார்ப்பனர் (பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவியாழ்வார்). மற்றவர்கள் ஒன்று பார்ப்பனர்கள் இல்லை என்று தெரியும்; இல்லையேல் எந்த குலம் என்று தெரியாது.

said...

பாலாஜி அவர்களே,
கருத்தை பதிப்பித்தமைக்கு நன்றி...."""கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!!""" என்று எழுதி என்னை மாட்டி விட்டு விட்டீர்களே :)

குழலி அவர்களுடைய பின்னூட்டத்திற்கு

""""""ஏற்கனவே இந்த சுட்டிகள் இதே பதிவரின் பதிவில் கொடுக்கப்ப்டிருந்தாலும் தற்போது மீண்டும் தரவேண்டியதாக இருக்கின்றது, ஏனெனில் சலிக்காமல் பொய்கள் பரப்பப்படும்போது அதை சலிக்காமல் எதிர்க்கும் சக்தி தேவைப்படுகின்றது .""""



திரு.குழலி அவர்களின் ஆயாசம் எனக்கு புரிகிறது...இந்த மாதிரியான ஒரு மொண்ணை வாதத்தை வைத்துக்கொண்டு அனைத்து விதமான கருத்துக்களை எதிர்க்க சக்தி அதிகம் தேவைப்படும்தான்...பாவம்...காலம் காலமாகவா என்று கேட்டு கணக்கெல்லாம் போட்டு காட்டியிருக்கிறார்..முதல் தலைமுறைக்கு ... 33 வருஷம்...அடுத்த தலைமுறைக்கு....என்று. என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்...

இவர் சொல்லுவது தாழ்த்தப் பட்டவர்கள் யாரும் இன்னும் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கவில்லை என்றா ? சரி...அப்படியானால் அனைவரும் அனுபவிக்கட்டும்...

கொஞ்ச பேர் மட்டும் அனுபவித்து முன்னேறியுள்ளார்கள் என்றா..சரி.அப்படியானால்.""""உங்களுக்குள்ளேயே"" கவனிக்க " உங்களுக்குள்ளேயே " இன்னும் முன்னேறாதவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு குடுக்கப் படட்டும்..அவனும் உங்களை மாதிரி முன்னேறட்டும்... இதை புரியாதவர் போல நடிக்கும் ""காரிய நடிகர்களை " என்ன சொல்ல ?மேலும் அவர் பதிவிலுள்ள முரண்களுக்கு வரி வரியாக விளக்கம் சொல்லப் போவதில்லை... அனுமானத்தை வைத்து பதிவெழுதுபவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

"""இப்போதாவது பார்ப்பனீயம், இடஒதுக்கீட்டின் நியாயங்கள் அதை எதிர்ப்பவர்களின் வாயாலே வருவதே இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் தொடர்முயற்சிக்கான வெற்றி...""

இட ஒதுக்கீட்டை நான் எங்கய்யா எதிர்த்தேன்...சும்மா அடிச்சு உடுறாங்க...நான் எழுதுனதைப் படிச்சுட்டு எழுதுகிறாறா இல்லை தலைப்பை மட்டும் படித்து விட்டு ரெண்டு சுட்டி குடுத்தாகிவிட்டதா?


""மற்றவர்களின் க்ரீமிலேயருக்காக குரல் கொடுப்பவர்கள் உயர்சாதி க்ரீமிலேயர்கள் உயர்சாதி ஏழைகளை அமுக்கும் அய்யோக்கியத்தனத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது செலக்டிவ் அம்னீசியா போல"""""

கண்டிப்பா குடுங்க ராசா... அவங்களுக்கும் கட்டாயம் முன்னேற வழி குடுக்கணும்..."""உண்மையிலேயே""" சமூக ரீதியாகவும் &/or பொருளாதார ரீதியாக பிந்தங்கியவர்களுக்கும் முன்னேற வசதி செய்து தரப்பட வேண்டும் & சலுகைகளிலும் முன்னுரிமை தரப்பட வேண்டும் அப்படீங்குறதை சொல்லத்தானே இந்தப் பதிவே.

எ.அ.பாலா கூட தனது ஒரு முந்தைய பதிவில் to start with 5 சதவிகிதம் கொடுக்கலாம் என்று எழுதியிருந்தார்...படிக்கலையா இல்லை செலெசக்டிவ் அம்னீசியாவா ?

அதுசரி குழலி வாயாலேயே உயர்சாதி அயோக்கியத்தனம்னு சொல்றதை குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் பண்ணினா அது சமூக நீதியாகி விடுமா? என்னன்னு புரியலையா? குழலி குடுத்த கமெண்டுலதான் ""உயர்சாதி க்ரீமிலேயர்கள் உயர்சாதி ஏழைகளை அமுக்கும் அய்யோக்கியத்தனத்தை """"
அப்படீன்னு புட்டு புட்டு வைக்கிறாரே அதைச் சொன்னேன்.

யோசிச்சு பாருங்க...உள்ள ஞாயம் புரியும்

கி.அ.அ.அனானி

said...

நாடோடி,

காக்டெயில் கம்யூனிசம்...என்ற வார்த்தை ரைமிங் ஆக இருக்கிறது...அது சரி...இங்கு கம்யூனிசத்தை ஏன் இழுக்கிறீர்கள் ?:)

கி.அ.அ.அனானி

said...

வஜ்ரா

கருத்துடன் உடன் படுவதை சொன்னதற்கு நன்றி

கி.அ.அ.அனானி

said...

நக்கீரன்,

நன்றி...பின்னூட்டியதற்கு

கி.அ.அ.அனானி

enRenRum-anbudan.BALA said...

நாடோடி, குழலி, Vajra, Anony 1 & 2, Nakkiran, கி.அ.அ.அனானி,

தங்கள் வருகைக்கு நன்றி ! அனைவருக்கும் கி.அ.அ.அ. விரிவாக பதிலளிப்பார் என்று நம்புகிறேன் !
***********************

Kumaran, Kannabiran,
நீங்கள் தரும் ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல !

//பாலா. அடுத்த திவ்ய தேசப் பதிவு எப்போது வரும்? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
//நானும் கேட்க வேணும் என்று இருந்தேன் பாலா; குமரன் கேட்டே விட்டார்; திவ்ய தேசப் பதிவு, அதற்கு அவ்வளவாக நேரமில்லை என்றால், ஆழ்வார்கள் பதிவு!
எதுனாச்சும் ஒன்றைத் தாருங்கள்; காத்து இருக்கிறோம்!
//
சீக்கிரம் எழுதுகிறேன் ! கொஞ்சம் முனைய வேண்டியிருக்கிறது :)

//12 ஆழ்வார்கள்ல 3 பேர் தான் பார்ப்பனர் (பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவியாழ்வார்). மற்றவர்கள் ஒன்று பார்ப்பனர்கள் இல்லை என்று தெரியும்; இல்லையேல் எந்த குலம் என்று தெரியாது.
//
குமரன் சொல்வது சரியே !

enRenRum-anbudan.BALA said...

Just to add to my last comment:

பெரியாழ்வார்
முன்குடுமி சோழிய பிராமண மரபில் வந்த வேயர்குலம்என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்த பட்டர் என்பவருக்கும்- பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர்.

மாயவரத்தான் said...

//குழலி / Kuzhali அவர்கள் http://anonymouse.org/ இதன் வழியாக பார்வையிடுகிறார்.

அவர் கொடுத்த இரண்டு சுட்டிகளும் இதன் வழியாகவே செல்கிறது.//

இதைத் தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி மாட்டிக் கொள்வது என்பது மிஸ்டர் நாடோடி.

குழலி பிராக்ஸி சர்வரெல்லாம் உபயோகிக்காமல் நேரடியாகத்தான் பார்வையிட்டிருக்கிறார். அவர் தந்துள்ள சுட்டிகளும் பிராக்ஸி இல்லாமல் நேரடியாக இங்கே பார்வையிட்டுக் கொண்டிருக்கும் எனக்கு நேரடியாக தான் கிடைக்கிறது.

நீங்கள் பிராக்ஸி சர்வர் மூலமாக இங்கே பார்வையிட்டுக் கொண்டிருந்தால், கண்டிப்பாக இங்கே உள்ள சுட்டிகளின் இணைப்பு கூட அப்படி தான் தெரியும்.

So, இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் மிஸ்டர் நாடோடி அந்த anonymouse.org மூலமாகத் தான் தளங்களை பார்வையிடுகிறார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரவிசங்கர். இதென்ன பிட்டு போடரீங்க? 12 ஆழ்வார்கள்ல 3 பேர் தான் பார்ப்பனர் (பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவியாழ்வார்). மற்றவர்கள் ஒன்று பார்ப்பனர்கள் இல்லை என்று தெரியும்; இல்லையேல் எந்த குலம் என்று தெரியாது.//

அடடா. பிட்டு எல்லாம் ஒண்ணுமில்லை குமரன்; இதுக்குத் தான் ஸ்மைலி போட வேண்டும் என்கிறது :-)

"பார்ப்பனீயம்" என்று ஒரே பேச்சாக இருக்குதே; கொஞ்சம் சூடு எல்லாம் தணிந்து இருக்கட்டுமே என்ற பொருளில் தான் அப்படிச் சொன்னேன்! நோக்கம்: பாலாவை கொஞ்சம் "hijack" செய்து, இந்த ஆன்மீகப் பதிவு பக்கமும் கருணை காட்டுங்கள் என்பது தான் :-))))

அப்படியாச்சும் ஆழ்வார்களைப் பற்றி எழுத முற்படும் போது இந்த வேறுபாடுகள் எல்லாம் தலை தூக்காது அல்லவா?

அப்படியே தூக்கினாலும், இப்போது உண்மை நிலையை பலர் அறிந்து கொள்வார்களே! 'பார்ப்பனரல்லாத' ஆழ்வார் என்று சொல்லப் புகுந்தால், பெரும்பான்மையான ஆழ்வார்கள் இதற்குள் வந்து விடுவார்களே! (ஆண்டாள் உட்பட...இது தனிப் பதிவில்)...
அது எவ்வளவு பெரிய சிறப்பு!

பன்னிரு ஆழ்வார்களும் குலத்தால் வேறுபட்டாலும் குணத்தால் ஒன்றுபட்டு, இன்று எல்லாக் கோவில்களிலும் கொண்டாடப்படுவது எவ்வளவு பெரிய சிறப்பு? இது ஒன்றே போதாதா மானுடத்தை வழிநடத்த?

குமரன் சரியான நேரத்தில் வந்து சுட்டிக்காட்டி விட்டார். இதை தான் எதிர்பார்த்தேன் :-); இதனால் இந்த தகவலை அறியாதவர்களும் அறிந்து ஒப்பு நோக்கி மகிழலாமே!

//மற்றவர்கள் ஒன்று பார்ப்பனர்கள் இல்லை என்று தெரியும்; இல்லையேல் எந்த குலம் என்று தெரியாது//

"தொண்டர் குலம்", அனைவரும்!
இப்படிச் சொல்லத் தான் மனம் மகிழ்கிறது.

இருப்பினும் எடுத்துக்காட்டுக்காக ஒன்று,
வைணவக் குலக் கொழுந்து என்று கொண்டாடப்படும் நம்மாழ்வார் வேளாள மரபினர்.
மற்றவர்களையும் இது போல் பட்டியல் இடலாம்; ஆனால் பட்டியல் இட்டா பக்தியைக் கொள்வது? இருப்பினும் சமூக நீதி என்ற பார்வைக்கு வேண்டுமானால், பட்டியல் இடத் துணியலாம். துணிகிறேன் பி்ன்னொரு பதிவி்ல்!
ஆழ்வார்கள் மட்டும் இல்லாது, ஆசாரியர்கள், மற்றும் இன்னும் பல முனிவர்களும், ரிஷிகளும் இதே போலத் தானே! பலர் அன்றாடம் அனுசந்திக்கும் காயத்ரியைத் தந்தவரே குலம் கடந்த பெருமுனிவர் விசுவாமித்திரர் தானே! இது தான் பக்தி இயக்கத்தின் பெருஞ்சிறப்பு!!

ஆழ்வார் திருவடிகளே சரணம்!

நாடோடி said...

//இதைத் தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி மாட்டிக் கொள்வது என்பது மிஸ்டர் நாடோடி.//
நான் பிராக்ஸி சர்வர் உபயோகிக்கவில்லை. நான் பயர்பாகஸ் பிரஸர் உபயோக்கிறேன். அதில் gladder extension எனக்கு இந்த பிரச்சனையை பண்ணியுள்ளது. bloggerல் உள்ள எதாவது ஒரு சுட்டியை சொடுக்கும் போது அது http://anonymouse.org/ வழியாக செல்கிறது. எதோ secutity என்று கூறியதால் gladder extension நிறுவி சோதனை செய்ய மறந்துவிட்டேன். அது என் தவறுதான். மன்னிக்கவும்.

நாடோடி said...

//காக்டெயில் கம்யூனிசம்...என்ற வார்த்தை ரைமிங் ஆக இருக்கிறது...அது சரி...இங்கு கம்யூனிசத்தை ஏன் இழுக்கிறீர்கள் ?:)//

காக்டெயில் கம்யூனிசம் இன்று உலகத்தில் 99% காணப்படும் கம்யூனிசம். அதாவது எதாவது ஒரு ஏஸி அறையில் படுத்துக்கொண்டு காக்டெயில் அருந்திக்கொண்டே மக்கள் பிரச்சனைகளை பேசி கொண்டிருப்பார்கள்(நடித்திக்கொண்டிருப்பார்கள்). இதுவும் அதேபோல்தான்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

A quick comment (I have not read the whole post):why not use the term casteism instead of
the term brahminism

enRenRum-anbudan.BALA said...

Ravi,
//A quick comment (I have not read the whole post):why not use the term casteism instead of
the term brahminism
//
This matter was received by mail from an anony friend who wanted it to be published as such without changing / editing.

But your suggestion makes sense, thanks !!!

enRenRum-anbudan.BALA said...

//
நாடோடி said...
//காக்டெயில் கம்யூனிசம்...என்ற வார்த்தை ரைமிங் ஆக இருக்கிறது...அது சரி...இங்கு கம்யூனிசத்தை ஏன் இழுக்கிறீர்கள் ?:)//

காக்டெயில் கம்யூனிசம் இன்று உலகத்தில் 99% காணப்படும் கம்யூனிசம். அதாவது எதாவது ஒரு ஏஸி அறையில் படுத்துக்கொண்டு காக்டெயில் அருந்திக்கொண்டே மக்கள் பிரச்சனைகளை பேசி கொண்டிருப்பார்கள்(நடித்திக்கொண்டிருப்பார்கள்). இதுவும் அதேபோல்தான்.
//
Nice one :)))

said...

//அதுசரி குழலி வாயாலேயே உயர்சாதி அயோக்கியத்தனம்னு சொல்றதை குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் பண்ணினா அது சமூக நீதியாகி விடுமா? என்னன்னு புரியலையா? குழலி குடுத்த கமெண்டுலதான் ""உயர்சாதி க்ரீமிலேயர்கள் உயர்சாதி ஏழைகளை அமுக்கும் அய்யோக்கியத்தனத்தை """"
அப்படீன்னு புட்டு புட்டு வைக்கிறாரே அதைச் சொன்னேன்.
//
சரியான நியாயமான கேள்வி தான், கி.அ.அ.அனானி அவர்களே

said...

"ravi srinivas said...
A quick comment (I have not read the whole post):why not use the term casteism instead of
the term brahminism"""

The casteism is always quoted as bhraminism and the quote of the quotes by so called social justice seakers / protectors is ""we are not against brahmins but against brahminsm" and they also do the same descrimination to others within & outside their caste in various forms and always divert the mass away from these issues by using such terms as "brahminism " et al indirectly implying on Brahmins...hence to term it in their own branding or naming used this title.

enRenRum-anbudan.BALA said...

//The casteism is always quoted as bhraminism and the quote of the quotes by so called social justice seakers / protectors is ""we are not against brahmins but against brahminsm" and they also do the same descrimination to others within & outside their caste in various forms and always divert the mass away from these issues by using such terms as "brahminism " et al indirectly implying on Brahmins...hence to term it in their own branding or naming used this title
//
Anony,
You have a point here worth debating, I believe !!!

murali said...

குழலி போன்ற ஆளுங்கள்லாம், இனையத்துல வந்து பதிவு போடர அளவுக்கு வளர்ந்த பின்னாலும், ஐயோ என்னோட இட ஒதுக்கீடு உரிமைய பரிச்சிடாதிங்க-ன்னு அலறுவதை பார்த்தா எனக்கு ஒரு பழ மொழி ஞாபகம் வருது.

"சொர்கத்துக்கு போயும் சோத்துப் பிச்சை
எடுத்தானாம்"
பா.முரளி தரன்.

enRenRum-anbudan.BALA said...

பா.முரளி தரன்.,
நன்றி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails